எத்தனை
செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வத்திற்கு அது ஈடாகாது. ஆனால் சில பெற்றோர்கள்
குழந்தைகள் நலனில், படிப்பில் மற்றும் அவர்கள் பாதுகாப்பில் அக்கறை எடுத்து
கொள்வதில்லை. சமிபத்தில் குழந்தைகள் பற்றி வந்த திரைபடங்கள் தங்க மீன்கள், 6 மெழுகு
வர்த்திகள் மற்றும் விடியும் முன். இந்த மாதிரி படங்கள் பொழுது போக்கிற்காக எடுக்க
பட்ட திரைப்படங்கள் அல்ல...குழந்தைகளின் விழிப்புணர்விற்காக எடுக்க பட்ட
படங்கள்.
தங்க மீன்கள் படத்தில் குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் (Capacity) மற்றும் அதற்கான சூழ்நிலை பற்றி எடுக்க பட்டது. இந்த படம் குழந்தைகளின் படிப்பு சம்பந்த பட்டது, இது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஷ்யாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள் மற்றும் பூஜா நடித்த விடியும் முன் போன்ற படங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி எடுக்க பட்ட படங்கள். இப்படியெல்லாம் நாட்டில் நடக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இந்த படங்களை பார்த்தால் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மேலே அதிக கவனம் செலுத்துவீர்கள். இது விமர்சனம் மட்டுமல்ல...ஒரு விழிப்புணர்வு பதிவு, முழுவதும் படியுங்கள்.
6 மெழுகு வர்த்திகள் : படம் பார்க்கின்ற உணர்வினை மறந்து ஒவ்வொரு காட்சியும் பதற வைத்து ஈரகுலை நடுங்க வைத்த படம். முதலில் படம் ஆரம்பித்து எட்டு நிமிடம் மட்டும் தான் சந்தோசம்....பிறகு அனைத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஷ்யாம் மற்றும் பூனம் தம்பதியரின் ஒரே மகனின் (கெளதம்) ஆறாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டு..கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு கவன குறைவால் மகனை தொலைத்து விடுகின்றனர். குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் பெரிய நெட்வொர்காக செயல்படும் மாபியா கும்பல், ஷ்யாமின் மகனை கடத்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடம் மாற்றுகிறது. மகனை தேடி ஒவ்வொரு மாநிலமாக சென்று நிறைய வில்லன்களுடன் மோதி உயிரை பணயம் வைத்து மகனை மீட்டெடுக்கிறார். ஷ்யாமிற்கு வாழ்நாளில் இந்த ஒரு படம் போதும்...அவரின் நடிப்பை பாராட்ட. மனிதர் குழந்தை மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். முகம் கண்ணெல்லாம் வீங்கி பைத்திய காரனை போல வட மாநிலங்களில் மகனை தேடும் காட்சி நெகிழ செய்கிறது.
மகனையும் தொலைத்து...அவனை தேடி சென்ற ஷ்யாம் பற்றி எந்த விபரம் தெரியாமல் மனைவி பூனம் தவித்து கொண்டிருப்பார்...அப்பொழுது ஷ்யாம் தொலைபேசியில் அழைக்கும் போது, பூனம் மனவேதனையுடன் ஷ்யாமிடம்...கௌதமும் இல்லாமல் நீயும் இல்லாமல் என்னால இருக்க முடியல, நீயாவது கிளம்பி வந்து விடு...உனக்கு எத்தனை பிள்ளை வேணாலும் பெத்து தரேன் என்பார் அதற்கு ஷ்யாம், கௌதம் இல்லாம, நாம வித விதமா துணிய கட்டிக்கிட்டு...நல்ல சாப்பிட்டு சந்தோசமா இருக்க சொல்றியா? என்று சொல்லிவிட்டு தேடுதல் வேட்டையை தொடர்வார். இறுதியாக கொல்கத்தாவில் மகனை தேடி செல்லும் ஒரு இடத்தில் அனைத்து மொழி பேசும் குழந்தைகள் அடைக்க பட்டிருப்பார்கள்..அவர்கள் அனைவரும் ஷ்யாமின் காலை பிடிச்சு கெஞ்சுவதை பார்க்கும் போது இதயம் ரணமாகி விடும். அங்கிருக்கும் மகனை அடையாளம் காண முடியாமல் (பல வில்லன்களிடம் மாட்டி சித்தரவதை செய்ய பட்ட ஷ்யாமின் மகன் ஆளே மாறி போயிருப்பான்....அது போல மகனை பல மாதமாக தேடி ஷ்யாமின் தோற்றமும் மாறி இருக்கும்) தவிக்கும் காட்சி...பிறகு மகனை அடையாளம் கண்டு அணைக்கும் காட்சி கண்ணில் நீரை வரவைத்து விடும்.
விடியும் முன் : மேலே சொன்ன படத்தில் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் போல, இந்த படத்தில் பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்துவது மற்றும் அதிலிருந்து விடுபட முயலும் ஒரு சிறுமி (மாளவிகா மனிகுட்டன்) மற்றும் பாலியல் தொழிலாளி ரேகா (பூஜா), அவர்களை துரத்தும் மூன்று சமூக விரோத கும்பலிடம் இருந்து விடுபடுவது தான் கதை.
பாலாவின் பரதேசி படத்திற்கு கால்சீட் கொடுக்காமல், பூஜா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை தந்திருப்பார். படத்தில் பூஜாவை வைத்து முன்பு தொழில் செய்த ஒரு புரோக்கர், என்ன ரேகா (பூஜா) முன்ன மாதிரி இப்ப தொழில் செய்ய வரமாட்டுகிற என்று சொல்வார்...அதற்கு பூஜா, இல்ல சிங்காரம் இப்ப வயசாகிடுசுல்லா என்று விலகி செல்கிறார். பிறகு அந்த புரோக்கர் பூஜாவிடம், ஒரு பெரிய புள்ளிற்கு சிறுமியை ஏற்பாடு செய்ய சொல்கிறார். பூஜா சில நிர்பந்தத்தினால...தான் வேலை பார்த்த இன்னொரு புரோக்கர் துரை சிங்கம் என்பவனிடம் இருந்து சிறுமியை அழைத்து வந்து....பெரும்புள்ளிக்கு ஏற்பாடு செய்கிறார். இறுதியில் தான் செய்வது தவறு என்று உணர்ந்து அந்த சிறுமியை பெரும்புள்ளியிடம் இடமிருந்து காப்பாற்றும் தருணத்தில், அந்த சிறுமி மற்றும் பூஜா இருவரும் அந்த காமுகனை கொலை செய்து விட்டு தப்பி விடுகின்றனர். இந்த இருவரை பிடிக்க...சிங்காரம் குரூப், துரைசிங்கம் குரூப் மற்றும் பெரும்புள்ளியின் மகன் & அடியாட்கள் துரத்துகின்றனர். இறுதியில் கிளைமேக்ஸ் என்ன நடக்குமோ என்று நினைக்கையில் யாரும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் இனிதே முடிவடைகிறது.
6 மெழுகு வர்த்திகள் மற்றும் விடியும் முன், குழந்தைகளுக்கு எதிராக நிழல் உலகில் நடக்கும் கொடுமைகளை பற்றி கூறுகிறது. குழந்தைகளை பெற்று படிக்க வைத்தால் மட்டும் நம் கடமை முடிந்து விடாது...அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் தினமும் கொஞ்ச நேரம் செலவழியுங்கள். கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் கூட குழந்தைகளை பார்த்து, அங்கே இங்கே நிக்காதே...பிள்ளை பிடிக்கிறவன் தூக்கிட்டு போயிருவான், யாரு எது கொடுத்தாலும் வாங்கி திங்காதே, பிறகு குறிப்பா பெண் குழந்தைகளை பார்த்து விளக்கேற்றும் நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பி வந்து விடு....இந்த மாதிரி சாதாரண விசயங்களை கூட நகரத்தில் இருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சொல்வதில்லை. நாட்டில் நடக்கும் விசயங்களை கொஞ்சம் நாசுக்காக கூறி விழிப்புரனர்வை ஏற்படுத்துங்கள். நாம் வசிக்கும் இடம், வீட்டின் விலாசம், அம்மா அப்பா மொபைல் நம்பர் போன்றவற்றை மறக்காமல் சொல்லி கொடுங்கள்.
சில பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்த படுகிறார்கள். சும்மா ஸ்கூலுக்கு போனியா...ஹோம் வொர்க் பண்ணிட்டியா என்று மட்டும் கேக்காமல், அவர்களின் தேவை மற்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று கேளுங்கள். மேலும் குழந்தைகளுக்கு தொடுகை பற்றி சொல்லி தாருங்கள், அதாவது குட் டச், பேட் டச் என்று கூறி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள்....இது இச்சை கொண்டிருக்கும் சில வாலிப வயது நண்பர், உறவினர், ஆசிரியர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களிடமிருந்து கவனமாக இருக்க செய்யும்...குறிப்பாக சில கிழட்டு கபோதிகளிடமிருந்தும் கூட.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சரியான சட்டம் இயற்ற படவில்லை. டெல்லி மாணவி விசயத்தில் கூட...முதலில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்று சொன்னார்கள். மேலும் குற்றம் புரிந்த இன்னொரு நபரின் வயதை காரணம் காட்டி...அவனை சிறுவன் என்று தண்டனை விலக்கு கொடுக்க பட்டது...பிறகு ஜுவனைல் சட்டம் பதினெட்டு வயதிலிருந்து...பதினாறு வயதாக குறைக்க பட்டு விடுபட்ட நபரையும் குற்றவாளியாக்க பட்டது. பிறகு நீதிபதி வர்மா கமிட்டி கூடி ஆலோசித்து கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் (வேதியல் முறையில் பாலியல் உறுப்புகளை செயலிழக்க செய்வது) தண்டனை பரிந்துரைக்க பட்டது....பிறகு அந்த தண்டனை நிராகரிக்க பட்டு, வெறும் ஆயுள் தண்டனையாக இருக்கிறது. பிறகு எப்படி குற்றங்கள் குறையும்...தவறு செய்யும் நபர்கள் எப்படி பயப்படுவார்கள்.
எதுக்குடா கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் சொல்றீங்க...இருக்கவே இருக்கு பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் (காயடிப்பு), கிராம புறங்களில் சில மிருகங்களுக்கு செய்ய படும் முறை. பின்னங்காலை தூக்கி கொண்டு நங்குன்னு நாலு அடி...அவ்வளவு தான், அது போல சில மனித மிருகங்களுக்கும் செய்ய வேண்டும் (உச்சா மட்டும் தான் இருக்க முடியும் வேறு ஒன்றும் முடியாது). இதை கேலியாக எடுத்து கொள்ள வேண்டாம். பாதிக்க பட்ட குழந்தைகளின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரா இருந்து சிந்தித்து பாருங்கள். பதின்ம வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை கூட நம்மால் ஜீரணிக்க முடிய வில்லை...அதை விட என்ன நடக்கிறது என்று தெரியாத குழந்தைகளுக்கு பாலியல் கொடூரமாக பெனட்ரேசன் (வன்புணர்வு) செய்யபட்டு கொலை செய்ய பட்டால்...நம்மால் சும்மா இருக்க முடியுமா. பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் தான் சரியான தண்டனை. சென்ற வருடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புனிதா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்ய பட்டு கொல்ல பட்டார். அவரை கெடுத்து கொன்ற அந்த காமுகன்...ஏற்கனேவே ஒரு கற்பழிப்பு புகாரில் சிக்கி இருக்கிறான். சட்டம் மட்டும் சரியாக தண்டனை கொடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுமா? மேலும் தவறு செய்ய நினைப்பவன் கூட பயந்து தவறு செய்ய மாட்டான்.
அரபு நாடுகளில் இருக்கும் சட்டங்கள் இங்கு அமல் படுத்த பட்டால் தான் குற்றங்கள் குறையும். மேலும் நாமும் குழந்தைகள் விசயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அது தவிர வேறு எங்காவது குழந்தைகள் சித்திரவதை மற்றும் வன்கொடுமை செய்ய படுவது தெரிந்தால் பின்வரும் சைல்டு ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிய படுத்துங்கள். 1098, 022-2495 2610 & 022-2495 2611 (Head office), 044-2815 6098, 044-2815 8098 (Southern region)
6 மெழுகுவர்த்திகள் படத்தில்...ஷ்யாம் காலினை பிடிச்சு கெஞ்சும் அந்த குழந்தைகள் தான் ஞாபகத்தில் வருகிறது. பரபரப்பாக நகரில் நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் ஐநூறு அடி தூரத்தில் கூட ஒரு குடவுனில் குழந்தைகள் அடைக்க பட்டு சித்திரவதை செய்ய படலாம்.. அப்படி உங்கள் கண்களுக்கு தென்பட்டால்...தயவு செய்து சைல்டு ஹெல்ப் லைன் போன் செய்து சொல்லுங்கள்.
கொசுறு: பெற்றோர்களே...உங்க பெண்ணுங்கள கஜினி சூர்யா மாதிரி இருக்க சொல்லுங்க. கஜினி படத்தில் சூர்யா தன்னுடைய நிலையை (Short term memory loss) உணர்ந்து, தன்னையையும் காப்பாற்றி கொண்டு...வில்லனையும் பழி வாங்குவார். அது போல பெண்களும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளிலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொண்டு...பிறகு பள்ளி கல்லூரிக்கு போகட்டும் இல்ல வேலைக்கு போகட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக