எப்போதாவது
அத்தி பூத்தாற்போல வரும் சில பாடல்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றன. அந்த
வகையில் கமல் மற்றும் கமலினியின் காதல் மழையில்....வேட்டையாடு விளையாடு படத்தில்
"பார்த்த முதல் நாளே" பாடல் - கணவன் மனைவி அன்பை மிக அருமையாக பாடலாசிரியர் தாமரை
சொல்லி இருப்பார். இவர் பாடல் வரிகளில் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழ் சொற்களை
பயன்படுத்துவது சிறப்பு.
இதில் வரும் "என் பதாகை தாங்கிய உன் முகம்" மற்றும் "உன் விழியில் வழியும் பிரியங்கள்" என்று அன்பின் புதிய பரிமாணங்களாக சொல்கிறார். மேலும் இந்த பாடலில் கணவன் மனைவி அன்பினை பற்றி கூறும் போது.....கணவன் மறந்த விசயங்களை மனைவி மீட்டெடுத்து வியப்பில் ஆழ்த்தி விடுவதாகவும் அதுபோல, கணவனும் மனைவியிடம் எதையும் கேட்கமால் அவளின விருப்பத்தை செய்ய முயலுவதை மிக இனிமையாக எழுதி இருப்பார். இறுதியாக கமல் விடை பெற்று செல்வது மற்றும் கதவோரம் நின்று கமலினி வழியனுப்பும் தருணம்....பாடல் கட்சிகளும் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். பாடகர் : உன்னி மேனன் - பாம்பே ஜெய்ஸ்ரீ
எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே
ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்
கொசுறு: பதாகை என்றால் கொடி என்ற பொருள். அதாவது நாயகியின் கொடி போன்ற உடலினை தாங்கி நிற்கும் நாயகனின் முகம்...அந்த நினைவுகள் என்றும் மறையாது என்று பொருள். அது என்னவோ..கமல் பட நாயகிகள் (விருமாண்டி அபிராமி, வே.விளையாடு கமலினி, அன்பே சிவம் கிரண், தசாவதாரம் அசின்....மற்றும் பலர்) அடுத்து தமிழ் சினிமாவில் காணாமல் போய் விடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக