செவ்வாய், 24 டிசம்பர், 2013

கழுகு போல வாழுங்கள்


நம் வாழ்வில் சில பழக்க வழக்கங்களை, ஒரு சில ஜீவராசிகளிடமிருந்து தெரிந்து கொள்கிறோம். உதரணமாக எறும்பு மற்றும் தேனீ போல சுறுசுறுப்பாக, நாய் போல நன்றியுடன் மற்றும் நரி போல தந்திரத்துடன்  இருக்க கற்று கொள்கிறோம். நான் சமிபத்தில் கழுகை பற்றி ஒரு ஆங்கில தொகுப்பில் படித்தேன். வாவ், என்னே ஒரு விசித்திர குணங்கள், நான் அதை கொஞ்சம் விளக்கமா தமிழில், இடையிலே மானே, தேனே போட்டு மற்றும் நம்ம வாழ்கையில் எப்படி பின்பற்றலமென்று கிறுக்கி இருக்கிறேன்.

1) கழுகு மற்ற பறவைகளை விட மிக உயரத்தில் பறக்கும். காக்கா, குருவி மற்றும் குயில் மாதிரி சின்ன உயிரனங்களிடம் இருந்து தனித்து வாழ்கிறது.


== நீங்களும் கழுகு போல, காக்கா, குருவி மாதிரி சின்ன பசங்க கிட்ட சேர்க்கை வச்சுகிடதீங்க (சில்லுவண்டுக கிட்ட சகவாசம் வச்சுடீங்க, பின்ன கூட்டதில கேலி பண்ணி உங்களை சின்னா பின்னமாக்கிடுவாங்க) உயர உயர பறந்தாலும் ஊர்-குருவி பருந்தாகாது, அது மாத்ரி மத்தவங்க என்ன தான் முயற்சி செஞ்சாலும் உங்க உயரத்தை தொட முடியாத அளவில் இருங்கள்.

2) கழுகு மற்ற பறவைகளனா காக்கா மற்றும் கொக்கு போல கூட்டம், கூட்டமாக இருக்காமல் சிங்கிளாத்தான் பறக்கிறது.

== நீங்களும் அது மாத்ரி, சிங்கம் போல சிங்கிளா போராடி ஜெயிச்சு காட்டுங்க. (கூட்டத்தோட கோவிந்தா போடாதீங்க)

3) கழுகின் சிறப்பியல்பே அதனுடைய பார்வை தான். வானில் சில கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும், அதன் இரையை துல்லியமாக குறி வைக்கிறது. இடையில் எந்த தடங்கல் இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் இரையை பற்றி கொள்கிறது.

== உங்களுக்கும் கழுகு பார்வை போல ஸ்ட்ராங் விஷன் இருக்கனும். கவனம் சிதறாமல் மனதினை கழுகு போல ஒருமுகபடுத்திகோங்க, எந்த தடை வந்தாலும் உங்க லட்சியத்தில் கண்ணும் கருத்துமா இருங்க. கழுகு போல குறி பார்த்து மனதை ஒருமுக படுத்தி இலக்கினை அடைய வேண்டும்.

4) கழுகு ஒரு பொழுதும் இறந்த உயிரனங்களை உணவாக சாப்பிடாது. கழுகு இனத்தை சாராத வல்ட்ஷர் (வல்லூறு) எனும் உருவில் பெரிய பறவை தான் சாப்பிடும், ஆனால் கழுகு, கருடன், ராஜாளி, பருந்து போன்றவை சாப்பிடாது.

== நாமும் இறந்த காலத்தை எண்ணி வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம். எப்பொழுதும் லைவாக (LIVE) இருக்கணும். பழையன கழிதலும், புதியன புகுதலும் போல இருக்க கற்று கொள்ளுங்கள்.

5) கழுகு தன் துணையை தேர்ந்தெடுக்க சில விதிமுறை வைத்திருக்கிறது. உதரணமாக பெண் கழுகிடம் ரொமான்ஸ் செய்ய வரும் ஆண் கழுகிடம் ஒரு சோதனையை முன்வைக்கிறது. அதாவது, பெண் கழுகு ஒரு சிறிய மரக்கட்டையை வாயில் வைத்து கொண்டு மிக உயரத்தில் பறக்கிறது பிறகு அதை நாடி வரும் ஆண் கழுகிடம் ஒரு சாவல் வைக்கிறது. என்னவென்றால், பெண் கழுகு தன் வாயிலிருக்கும் மரக்கட்டையின் பிடியை விடுகிறது, மரக்கட்டை கீழே நோக்கி வருகிறது. உடனே பெண் கழுகு, ஆண் கழுகிடம் அந்த மரக்கட்டை பூமியை அடைவதற்குள் பிடித்து வருமாறு நிபந்தனை வைக்கிறது. ஆண் கழுகு அந்த மரக்கட்டையை பிடித்து, மேலிருக்கும் பெண் கழுகிடம் கொண்டு சேர்த்து விட்டால், உடனே பெண் கழுகு "மன்மத ராசா, மன்மத ராசா அள்ளி மனசை கிள்ளாதே" என்று பாட ஆரம்பித்துவிடும். இல்லையெனில் பெண் கழுகு, ஆண் கழுகை பார்த்து "கொசங்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டி கேக்குதாடா (ஊரோரம் புளியமரம்)" என்று சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடும் 

== நம் துணையை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும், அதிலும் குறிப்பாக பெண்கள். காதல் வயப்படும் கிராமத்து பெண்கள் கூட, தனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர், ஆனால் பட்டணத்து பெண்களில் பலர் காதலின் மயக்கத்தில், துணையை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் படுகுழியில் விழுந்து விடுகின்றனர். இறுதியில் பூந்தொட்டமான வாழ்க்கை நரகமாக மாறி விடுகிறது. பிறகு கோர்ட், டைவர்ஸ் என்று அலைய வேண்டியது தான். சரியான துணை கிடைக்காமல் இப்பொழுது "டைவர்ஸ் என்பது பியுச்சர் டென்ஸ் ஆப் மேரேஜ்" ஆகி விட்டது.

இன்னும் கழுகிடம் விசித்திர குணங்கள் இருக்கிறது. நேரமின்மை காரணமாக பதிவேற்ற முடியவில்லை. பூமியில் பொதி சுமக்கும் கழுதை மாதிரி இல்லாமல், வானில் வட்டமிடும் கழுகாக இருங்கள். மனதை ஒருமுக படுத்தி இலக்கினை அடையுங்கள்.

கழுகு மாதிரி வாழ கற்று கொள்ளுங்கள்

எஸ். ரெங்க ராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக