திங்கள், 30 டிசம்பர், 2013

நையாண்டி - பகுதி 2


காலையில் டென்சனுடன் ஆபிஸ் கிளம்பும் நேரத்தில், ஒரு ஐந்து நிமிடம் பாடல் இல்ல காமெடி பார்த்து விட்டு சென்றால் சற்று ரிலாக்ஸா இருக்கும். ஒரு நாள் காலை சேனலை மாற்றும் போது...லோட்டஸ் டிவி (பி.ஜே.பி-யின் பிரத்யோக சேனல்)தென்பட்டது, அதில் நித்தியானந்தா ஆன்மீக சொற்பொழிவு ஓடிகொண்டிருந்தது. பாத்த மாத்திரமே, வேற சேனலுக்கு மாத்திடேன். அடுத்து ஒரு லோக்கல் சேனலில், "காளை காளை...முரட்டு காளை" (மனிதன்) பாடல் ஓடி கொண்டிருந்தது. 80-களில் வந்த பாடல்களை கேக்கும் போதே, அந்த பாடல் வரிகளை இயல்பாகவே பாட ஆரம்பித்து விடுவோம். அந்த பாட்டில் ரஜினி, ரூபிணி ஒரு பூங்காவில் வைத்து நடனமாடி பாடி கொண்டிருப்பார்கள். அந்த பாடலின் சில வரிகள் கோக்கு மாக்காக இருக்கும்.

ரூபிணி: பொம்பளைய சேராமா போய் சேர்ந்த ஆளுகளை, கட்டையிலே தீ கூட தீண்டாதய்யா.


ரஜினி: சேலைக்குள் தெரியாம சிக்கி விட்ட ஆம்பளைக்கு, சொர்க்கத்தில் இடமேதும் கிடையதம்மா.

இந்த பாட்டில் ரஜினி சொல்வது ஒரு புறம் உண்மையாக இருந்தாலும் கூட  ரூபினி பாடுவது நக்கலாக இருக்கிறது. ஆனால் ரூபினி கூறுவது மட்டும் உண்மையாக இருக்குமேயானால், இங்கு பல சாமியார்களின் கட்டை (இறந்த பிறகு) பத்த வச்ச உடனே சும்மா தக தகவென கொழுந்து விட்டு எரியும்  பேட் பெல்லோஸ்

பிரேமானந்தா-லிருந்து, தற்பொழுது ஆஷ்ரம் பாபு வரை எல்லா சாமியாரும் பொண்ணுக கிட்ட தப்பா நடந்தவங்க. சாமியார பார்த்து என்னய்யா இதுன்னு கேட்ட...நாங்க அவதார புருஷனு சொல்லுவாங்க. அப்படியே செவுள்ளே நாலு அரைய விடனும். எங்க ஏரியா தின்னவேலி-ல சர்ச்சு பாதர் ஒருத்தரு, ஒரு பதினாறு வயசு பொண்ணுகிட்ட தப்ப நடந்து...அந்த பொண்ணு வவுத்ல வளர்ர பிள்ளைக்கு பாதர் ஆகிட்டாரு, அட பாவமே. இந்த "சாமி இல்லேன்னு" சொல்றவங்கள கூட நம்பலாம், ஆனா நான் தான் சாமின்னு சொல்றவனே மட்டும் நம்பாதீங்க.
உங்க மனசாட்சி தாங்க சாமி, "நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியே".

மனசாட்சிக்கு பயந்து நடங்க....அந்த கடவுளே உங்களுக்கு துணை இருப்பாரு.

கொசுறு: மும்பையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் நடக்கும். இங்கே சிறப்பா விளையாடுறவங்கள நம்ம இந்திய அணிக்கு தேர்வு செய்வார்கள். பொதுவாக ரஞ்சி கோப்பை போட்டிகள் டிவியில் போட மாட்டாங்க. ஆனால், நம்ம "நித்தி" விளையாடின "ரஞ்சி"கோப்பை கிரிகெட்டை சன் டீவி இரண்டு நாட்கள் ஒளிபரப்பு செய்தனர். ஹலோ மாறன், நித்தியோட பாவம் உங்கள சும்மா விடாது 

செய்தி: ரஞ்சிதா,  நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சந்நியாசம் மேற்கொண்டுள்ளார், மேலும் தன் பெயரை "மா ஆனந்தமாயி" என்று மாற்றியுள்ளார்.  Nithy and Ranji gives message to public that good and bad things will be happening in our life and we don't care about anything

சனி, 28 டிசம்பர், 2013

உன்னால் முடியும் பெண்ணே....

நந்தினி.....தற்பொழுது தமிழகத்தில் மது விலக்கு கோரி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் சட்ட கல்லூரி மாணவி. இவரின் நோக்கம் நிறைவேறுவது சற்று கடினம் தான். மது பழக்கம், தமிழகத்தில் வேருன்றி விட்டது அது மட்டுமல்ல, அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி கொடுப்பதில் முதன்மையாக இருப்பது மது கடைகள் தான். எனவே பூரண மது விலக்கு அமல் படுத்துவதேன்பது சற்று முடியாத காரியம். ஆனால் முயன்றால் எதுவானாலும் முடியும். சற்று வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த மாணவியின் போரட்டத்தை முக நூல் தவிர மற்ற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டனர். பல சமுக போராட்டங்களுக்கு அதரவு கொடுக்கும் மக்கள், அரசியல் கட்சிகள்...இந்த மாணவியின் பிரச்சனயை கண்டு கொள்ளவில்லை.

இதற்கு முன்பு சசி பெருமாள் என்ற என்பது வயது முதியவர் பூரண மது விலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கும் இதே கெதி தான். அவரை வலு கட்டயமாக உண்ணாவிரதத்தை கைவிட செய்தனர். ஆனால் நந்தினி தன் தந்தையுடன் விடா பிடியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். போன செவ்வாய் கிழமை முதல்வரை சந்திக்க சென்னைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்த பட்டு...இப்பொழுது மதுரையில் வைகை ஆற்றில் (அழகர் இறங்கும் இடத்தில்) உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். ஏன் இந்த போராட்டம்...கூக்குரல், நம் சமுகத்தில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த வில்லை???

ஏதாவது ஒரு விஷயத்தை செய்வதற்கு இல்லை அதை ஆதரித்து பேசுவதற்கு...கொஞ்சம் யோக்கிதை வேணும். இந்த விஷயத்தை பொறுத்தமட்டில், எனக்கு அது இல்லை. நானும் மது அருந்தி இருக்கிறேன். அடிக்கடி இல்லை...என்றாவது ஒரு நாள் தான். அலுவலக நண்பர்களின் கட்டாயத்தினால், சொந்த ஊரில் விழா காலங்களில் மற்றும் ஈடு செய்ய முடியாத சில உறவுகளின் கண்டோலன்ஸ் சமயத்தில்....அளவாக அருந்தியதுண்டு. அது ஒன்றும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. இருந்தாலும்..இந்த மாணவியின் போராட்டம் நமது செயலையும் மீறி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சுமார் ஒரு ஆறு மாத காலமாக போராடி வருகிறார். ஏன் இவளின் போராட்டம் அனைவரிடமும் போய் சேரவில்லை....டெல்லி மாணவிக்காக போராடிய மக்கள் கூட இந்த பெண்ணின் போராட்த்திற்காக குரல் கொடுக்க வில்லை.

நகர் புறங்களில்...கார்பரேட் மற்றும் மல்டி லெவல் நிறுவனங்களில் பணி புரிந்து ஐந்து இலக்க ஊதியம் வாங்கி கொண்டு வார இறுதியில் டிஸ்கோதே ஆடும் பல நபர்களுக்கும், நட்சத்திர விடுதியில் குடியும் கும்மாளமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் மற்றும் லஞ்சம், ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பண்ணை வீடுகளில் கூத்து கும்மாளம் அடிக்கும் சில அரசியல் வாதிகளுக்கும்.... இந்த பெண் நடத்தும் மது விலக்கின் அருமை தெரியாது.


கிராம புறங்களில் பணி புரியும் ஆண்கள் தின கூலியாக 80 ருபாய் வாங்கி.....குடும்ப செலவிற்காக ஒன்றும் கொடுக்காமல், அதை அப்படியே டாஸ்மாகில் கொடுத்து மது அருந்தி தெருவில் மயங்கி....குடும்பத்தை தெருவில் நிற்கதியாக நிற்க வைத்து விடுகிறான். அந்த குடும்பம் அடையும் அவஸ்தைகளை சொல்லி மாளாது. உன்னால் முடியும் தம்பி படத்தில் கவிஞர் புலமை பித்தன் சொல்லி இருப்பார் "குடிச்சவன் போதையில் நிற்பான்....குடும்பத்தை வீதியில் வைப்பான்". குடி பழக்கத்தினால் அவனுக்கு காசும் போயி, உடல் நலமும் கெட்டு விடுகிறது...பிறகு அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. மேலும் சிலர் அளவுக்கு மீறி குடித்து...சுய நினைவு இழந்து சில வன்முறை மற்றும் குற்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.

இந்த கொடிய பழக்கத்தில் இருந்து விடுபட தான்...நந்தினி போராடி வருகிறார். ஆனால், அரசு இவரை கைது செய்து திருப்பி மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளது. வருகின்ற புத்தாண்டுக்கும்...பொங்கலுக்கும், மதுவின் விற்பனையை அதிகரிக்க அரசு திட்டங்கள் தீட்டி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் இவரின் போராட்டத்தை கைவிட சொல்லி அரசு வற்புறுத்துகிறது. இப்போது வேணுமானல் நந்தினியின் போராட்டம் முறியடிக்கபடலாம். ஆனால் இவர் போட்ட இந்த விதை நிச்சயமாக விருட்சமாக வளர்ந்து வெற்றி கொடி கட்டும்.

உன்னால் முடியும் தம்பி பட பாடல் (சில மாற்றங்களுடன்)
உன்னால் முடியும் பெண்ணே. .

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாரய கங்கை காயாதமா
ஆள்வோர்கள் போடும் திட்டங்கள் யாவும்
மது விலக்கினை ஏற்காதம்மா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளம்மா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தானே
கட்சிக் கொடி ஏறுது பெண்ணே
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யணும்

உன்னால் முடியும் பெண்ணே. .பெண்ணே.
இங்கு எல்லோரும் உந்தன் பின்னே

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்.

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி..


ரெங்க ராஜன்

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கழுகு போல வாழுங்கள்


நம் வாழ்வில் சில பழக்க வழக்கங்களை, ஒரு சில ஜீவராசிகளிடமிருந்து தெரிந்து கொள்கிறோம். உதரணமாக எறும்பு மற்றும் தேனீ போல சுறுசுறுப்பாக, நாய் போல நன்றியுடன் மற்றும் நரி போல தந்திரத்துடன்  இருக்க கற்று கொள்கிறோம். நான் சமிபத்தில் கழுகை பற்றி ஒரு ஆங்கில தொகுப்பில் படித்தேன். வாவ், என்னே ஒரு விசித்திர குணங்கள், நான் அதை கொஞ்சம் விளக்கமா தமிழில், இடையிலே மானே, தேனே போட்டு மற்றும் நம்ம வாழ்கையில் எப்படி பின்பற்றலமென்று கிறுக்கி இருக்கிறேன்.

1) கழுகு மற்ற பறவைகளை விட மிக உயரத்தில் பறக்கும். காக்கா, குருவி மற்றும் குயில் மாதிரி சின்ன உயிரனங்களிடம் இருந்து தனித்து வாழ்கிறது.


== நீங்களும் கழுகு போல, காக்கா, குருவி மாதிரி சின்ன பசங்க கிட்ட சேர்க்கை வச்சுகிடதீங்க (சில்லுவண்டுக கிட்ட சகவாசம் வச்சுடீங்க, பின்ன கூட்டதில கேலி பண்ணி உங்களை சின்னா பின்னமாக்கிடுவாங்க) உயர உயர பறந்தாலும் ஊர்-குருவி பருந்தாகாது, அது மாத்ரி மத்தவங்க என்ன தான் முயற்சி செஞ்சாலும் உங்க உயரத்தை தொட முடியாத அளவில் இருங்கள்.

2) கழுகு மற்ற பறவைகளனா காக்கா மற்றும் கொக்கு போல கூட்டம், கூட்டமாக இருக்காமல் சிங்கிளாத்தான் பறக்கிறது.

== நீங்களும் அது மாத்ரி, சிங்கம் போல சிங்கிளா போராடி ஜெயிச்சு காட்டுங்க. (கூட்டத்தோட கோவிந்தா போடாதீங்க)

3) கழுகின் சிறப்பியல்பே அதனுடைய பார்வை தான். வானில் சில கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும், அதன் இரையை துல்லியமாக குறி வைக்கிறது. இடையில் எந்த தடங்கல் இருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் இரையை பற்றி கொள்கிறது.

== உங்களுக்கும் கழுகு பார்வை போல ஸ்ட்ராங் விஷன் இருக்கனும். கவனம் சிதறாமல் மனதினை கழுகு போல ஒருமுகபடுத்திகோங்க, எந்த தடை வந்தாலும் உங்க லட்சியத்தில் கண்ணும் கருத்துமா இருங்க. கழுகு போல குறி பார்த்து மனதை ஒருமுக படுத்தி இலக்கினை அடைய வேண்டும்.

4) கழுகு ஒரு பொழுதும் இறந்த உயிரனங்களை உணவாக சாப்பிடாது. கழுகு இனத்தை சாராத வல்ட்ஷர் (வல்லூறு) எனும் உருவில் பெரிய பறவை தான் சாப்பிடும், ஆனால் கழுகு, கருடன், ராஜாளி, பருந்து போன்றவை சாப்பிடாது.

== நாமும் இறந்த காலத்தை எண்ணி வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம். எப்பொழுதும் லைவாக (LIVE) இருக்கணும். பழையன கழிதலும், புதியன புகுதலும் போல இருக்க கற்று கொள்ளுங்கள்.

5) கழுகு தன் துணையை தேர்ந்தெடுக்க சில விதிமுறை வைத்திருக்கிறது. உதரணமாக பெண் கழுகிடம் ரொமான்ஸ் செய்ய வரும் ஆண் கழுகிடம் ஒரு சோதனையை முன்வைக்கிறது. அதாவது, பெண் கழுகு ஒரு சிறிய மரக்கட்டையை வாயில் வைத்து கொண்டு மிக உயரத்தில் பறக்கிறது பிறகு அதை நாடி வரும் ஆண் கழுகிடம் ஒரு சாவல் வைக்கிறது. என்னவென்றால், பெண் கழுகு தன் வாயிலிருக்கும் மரக்கட்டையின் பிடியை விடுகிறது, மரக்கட்டை கீழே நோக்கி வருகிறது. உடனே பெண் கழுகு, ஆண் கழுகிடம் அந்த மரக்கட்டை பூமியை அடைவதற்குள் பிடித்து வருமாறு நிபந்தனை வைக்கிறது. ஆண் கழுகு அந்த மரக்கட்டையை பிடித்து, மேலிருக்கும் பெண் கழுகிடம் கொண்டு சேர்த்து விட்டால், உடனே பெண் கழுகு "மன்மத ராசா, மன்மத ராசா அள்ளி மனசை கிள்ளாதே" என்று பாட ஆரம்பித்துவிடும். இல்லையெனில் பெண் கழுகு, ஆண் கழுகை பார்த்து "கொசங்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டி கேக்குதாடா (ஊரோரம் புளியமரம்)" என்று சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடும் 

== நம் துணையை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும், அதிலும் குறிப்பாக பெண்கள். காதல் வயப்படும் கிராமத்து பெண்கள் கூட, தனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து கொள்கின்றனர், ஆனால் பட்டணத்து பெண்களில் பலர் காதலின் மயக்கத்தில், துணையை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் படுகுழியில் விழுந்து விடுகின்றனர். இறுதியில் பூந்தொட்டமான வாழ்க்கை நரகமாக மாறி விடுகிறது. பிறகு கோர்ட், டைவர்ஸ் என்று அலைய வேண்டியது தான். சரியான துணை கிடைக்காமல் இப்பொழுது "டைவர்ஸ் என்பது பியுச்சர் டென்ஸ் ஆப் மேரேஜ்" ஆகி விட்டது.

இன்னும் கழுகிடம் விசித்திர குணங்கள் இருக்கிறது. நேரமின்மை காரணமாக பதிவேற்ற முடியவில்லை. பூமியில் பொதி சுமக்கும் கழுதை மாதிரி இல்லாமல், வானில் வட்டமிடும் கழுகாக இருங்கள். மனதை ஒருமுக படுத்தி இலக்கினை அடையுங்கள்.

கழுகு மாதிரி வாழ கற்று கொள்ளுங்கள்

எஸ். ரெங்க ராஜன்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஆமாம் பாட்டி

ஒரு நாள் எங்க ஊர் பொதிகை மண்டலம் புளியங்குடியில் பலசரக்கு வாங்க கடைக்கு சென்று இருந்தேன். அச்சமயம் ஒரு பாட்டி வந்து கடைக்காரரிடம், சோப்பு கேட்டாங்க.....அந்த நகைச்சுவை உரையாடலை கீழே காணவும். 

பாட்டி: மேலுக்கு போடுற சோப்பு ஒன்னு கொடுப்பா

கடைக்காரர்: (சற்று குழப்பத்துடன்), பாட்டி குளிக்கிற சோப்பா வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: சரி, என்ன சோப்பு வேணும் பாட்டி

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: பாட்டி, குளிக்கிற சோப்புல என்ன சோப்பு வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: ஐயோ பாட்டி, குளிக்கிற சோப்புல நிறைய கம்பெனி சோப்பு இருக்கு, உனக்கு என்ன வேணும்

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: (கோபத்துடன்) பாட்டி, எதை கேட்டாலும் ஆமாம்.....ஆமாம் னு சொல்லி கடுப்பேத்துரே, உனக்கு என்ன சோப்பு வேணும்னு சொல்லி தொலை

பாட்டி: ஆமாம்

கடைக்காரர்: என்ன ஆமாம், ஓமாம் னு சொல்லி உயிரை வாங்காதே.....என்ன சோப்பு வேணும் தெளிவா சொல்லு.

பாட்டி: ஆமாம் சோப்பு......குட்டியா இருக்கும்லா.....அதான்பா வேணும்.

இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த எனக்கு அப்ப தான் தோணிச்சு.....பாட்டி "ஹமாம்" சோப்பை தான் ஆமாம் சோப்பு என்று சொன்னது தெரிய வந்தது. கடைக்காரரிடம் விவரத்தை சொன்ன உடனே....ஒரு சாம்பிள் ஹமாம் (சின்ன சைஸ்) சோப்பை எடுத்து பாட்டி கையில கொடுத்தார். உடனே பாட்டி, இது தான் நான் கேட்டா ஆமாம் சோப்பு...இதை சரியா எடுத்து கொடுக்குறதுக்குள்ள, மனுஷியை இந்த பாடு படுத்துற. அந்த கண்ணாடி தம்பி (இட்ஸ் மீ) எப்டி சரியா சொல்லிச்சு  ....நீயும் இருக்கிய....என்று கடைக்காரரிடம் சொன்னது.

உடனே கடைக்காரர், சரி முதல்ல இடத்தை காலி பண்ணு...இந்தா சோப்பை எடுத்துகிட்டு போத்தா....இந்த வயசிலும் உனக்கு சோப்பு ஒரு கேடா? என்று சொன்னார். இறுதியாக பாட்டி, இந்த கட்டைக்கு எதுக்குபா சோப்பு, ஊர்ல இருந்து பேச்சி வந்துருக்கா என்று தனது மகள் வரவை சொல்லி, கூட கூட்டி வந்த பேரனுக்கு நாலனாக்கு சாக்லேட் வாங்கிட்டு நடையை கட்ட ஆரம்பித்தது.

இதே மாதிரி எங்க பாட்டியும் "அனாசின்" மாத்திரை கேட்டா....கடைக்காரரிடம் போயி, "அன்னாச்சி" மாத்திரை கொடுங்க என்றும் கேட்டு கடைக்கார அண்ணாச்சியை கன்பியூஸ் பண்ணியதும் இருக்கு


சில சமயம்,
ஆதித்ய காமடியை விட....அப்பத்தா காமடி நல்லா இருக்கு

- எஸ். ரெங்க ராஜன்

சனி, 7 டிசம்பர், 2013

நையாண்டி (பகுதி 1)

== பருக் அப்துல்லா Vs கணபதி ஐயர் ==

நேற்று மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா பெண்களை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. பிறகு ஒரு மணி நேரத்திலே அவர் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கோரினர். அவர் கூறிய கருத்து இது தான்: இப்ப இருக்கும் காலத்தில் பெண்களை பெர்சனல் செகரட்டரியாக வைத்து கொள்ள முடியாது. பெண்களிடம் பேசுவதற்கே பயமாக இருக்கிறது.


பருக்-ஜி, பெண்களை உதவியாளராக வைத்து கொள்ளலாம் தப்பில்லை ஆனால் மற்றபடி "வைத்து" கொள்ள கூடாது....அப்படி வைத்திருந்தால் து"வைத்து" விடுவார்கள்

வேணுமென்றால் கணபதி ஐயர் மாதிரி உங்களிடம் பேக்கரி இருந்தால் சொல்லுங்கள், வீரபாகு-விடம் கேட்டு டீலிங் பண்ணிக்கலாம்.

== நாளைய செய்தி  ==

(தேர்தல் முடிவிற்கு ஒரு நாள் முன்பு)

செய்தி: ஏற்காடு இடைதேர்தல் முடிவில் அ.தி.மு.க அதிக வாக்குகள் பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது.

ஜெ: அ.தி.மு.க அரசின் மகத்தான சாதனைக்கு மக்கள் கொடுத்த வெற்றி.

கருணாநிதி : இடைதேர்தல் என்றால், ஆளும் கட்சி ஜெயிப்பது என்பது சகஜம். போன ஆட்சியில் அ.தி.மு.க, பொன்னகரம் இடைதேர்தலில் டெபாசிட் இழந்ததை மறக்க கூடாது.

திருமா/வீரமணி : ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. தேர்தல் சரியான முறையில் நடந்திருந்தால் தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கும்.

மக்கள்: ஹி ஹி ஹி

ரெங்க ராஜன்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

பாவம் ஆண்கள்

திருமணமாகதா நண்பர்களே, வீட்டில் பெண் பார்க்கும் போது: ஒன்று, படிச்ச பொண்ணை பார்க்க சொல்லுங்க, இல்ல படிக்காத பொண்ணை பார்க்க சொல்லுங்க, தயவு செய்து படித்து கொண்டிருக்கும் பொண்ணை மட்டும் பார்க்க சொல்லாதீங்க. வேலை பார்க்கும் பொண்ணாக இருந்தாலும் பரவாயில்லை....இந்த படிச்சுகிட்டு இருக்கும் பொண்ணை கட்டுனீங்க....எப்ப பாரு படிக்கிறேன், படிக்கிறேன் சொல்லிட்டு ஒரு வேலையும் செய்ய மாட்டங்க.  பின்ன நீங்க தான் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யணும்  அது தவிர இந்த போட்டி தேர்விற்கு தயாராகும் பெண்கள், வீட்ல சமையல் பண்ண மாட்டங்க, TV பாக்க விட மாட்டங்க. ஒரு வருசத்துல தொடர்ச்சியா TET exam, TNPSC exam அடுத்து IBPS (Bank) exam என்று வரிசையா வச்சுருகாங்க, நம்ம பாடு திண்டாட்டம் தான். ஆர்யா பாடுற மாதிரி வருஷம் புல்லாம் நமக்கு இப்ப ஆடி மாசம் தான் என்ற நிலை ஆகிவிடும்

அது மட்டுமில்ல, ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை, வீட்ல இல்லாத புக்ஸ் வாங்கி கொடுக்கணும்....(நானெல்லாம் பரீட்சை முடிஞ்சு பாஸ் ஆகிட்டா, முதல் வேலை எல்லா புக்சையும் பேப்பர் கடையில போட்டு புரோட்டா வாங்கி தின்றுவேன். இப்ப கடைசிய MBA கரஸ்ல படிச்ச புக்ஸ் மட்டும் இருக்கு....ம்ம்..புரோட்டா சாப்பிட்டு ரெம்ப நாளாச்சு, பார்க்கலாம் 

இதுல வேற, நம்மலயும் சேர்த்து...ஏங்க நீங்களும் இந்த எக்ஸாம் எழுத வேண்டியது தானே, பிரைவேட் கம்பெனியிலே எத்தனை வருஷம் கஷ்டப்பட போறிங்கனு ஒரெ இம்சை. நமக்கு இந்த எக்ஸாம், படிப்பு, ரிசல்ட் இதெல்லாம் ஒரே அலர்ஜி. ஒரு தடவ TNPSC (Group 2) அப்பளை பண்ணி எக்ஸாம்-க்கு போகல...வீட்ல என் மனைவி, போயி எழுதிட்டு வரவேண்டியது தானே என்றதும், "சினம் கொண்ட சிங்கத்தை எக்ஸாம் ஹால்-ல அடைச்சு வச்சுருந்த, எக்ஸாம் சென்டரையே சிதைச்சுரும் பரவாயில்லையா"......இங்க பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக் என்று வடிவேலு மாதிரி பீலா விட்டு, நீ படிச்சுருகேல போயி எழுதிட்டு வா தாயி....என்று கூறி அனுப்பியாச்சு. ஆமா, பாஸ்-ஆகி செலக்ட் ஆன உடனேவா, போஸ்டிங் போட்டுருவாங்க? காசு கொடுத்தான் ப்லேஷ்மென்ட் கிடைக்கும் (கவருக்குள்ளே அமவுண்ட் அதுதானா கவருமென்ட் )

சரி இருந்தாலும் வீட்ல ஆசை படுறாங்கனு, நெக்ஸ்ட் வர போகும் எக்ஸாம் அப்ளை பண்ணுவோம்னு சொல்லிருக்கேன். ஆமாம், எத்தனையோ பிச்சுமணி (வடிவேலு) போல நானும் அரசு வேலைக்கு காத்திருக்கிறேன். அப்படி ஒன்று நடக்குமேயானால், பேஸ் புக்-ல நான் போடும் ஸ்டேட்டஸ் இதுவாக தான் இருக்கும்

"அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆடர்......நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கவருமென்டுக்கு கேட்ட்ருச்சு.....எடு எடு வண்டியை எடு 

எஸ். ரெங்க ராஜன்