தமிழில்
அணியிலக்கணம் என்ற ஒரு பாடம் இருக்கிறது. அதில் தற்குறிபேற்ற அணி, உருவக அணி, வஞ்ச
புகழ்ச்சி அணி மற்றும் பல அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளை பற்றி எடுத்துரைக்க பழைய
சங்க கால பாடல்களை உதாரனமாக சொல்லி கொடுப்பார்கள். அந்த வகையில் தற்குறிபேற்ற அணி
தெரிந்து கொள்ள கீழ்கண்ட சிலப்பதிகார பாடலை கூறுவார்கள்.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
அதாவது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை கூறுவது தற்குறிபேற்ற அணியாகும். சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரை மாநகரில் கொல்லபடுவான் என்று முன்னே அறிந்த கவிஞர் (இளங்கோவடிகள்), தோரண வாயிற் கொடிகளின் இலைகள் இயல்பாக அசைவதை "கோவலனை இங்கு வர வேண்டாம்" என்று மறித்து காட்டுவதாக கூறியிருப்பார். அதுபோல, மிதிலை நகரத்தில் உச்சியில் பறந்த கொடிகள் இராமனை அழைப்பது, கைகளை நீட்டி வருக வருக என்று கம்பரும் இராமாயணத்தில் கூறி இருப்பார் (பாடல் சரியாக தெரிய வில்லை)
கம்பரோ இல்லை இளங்கோவடிகள் கூறிய இலக்கியம் சார்ந்த பாடல்களை மனதில் வைத்து கொள்ள கடினமாக இருக்கலாம். அதற்கு பதிலாக எளிமையான உதாரணங்களை கூறினால் மனதில் சுலபமாக புரிந்து கொள்ளலாம். உதாரனமாக பின்வரும் வாக்கியத்தை கவனிக்கவும்.
உனது பிரிவை நேற்று இரவு புற்களிடம் கூறினேன்
மறுநாள் காலை அவைகளும் கண்ணீர் வடித்திருந்தன.
தலைவியை பிரிந்த தலைவன் தனது தவிப்பை தோட்டத்தில் உள்ள புற்களிடம் கூற, மறுநாள் காலையில் அவைகள் கண்ணீர் வடித்தது. இயல்பாக புற்களின் மேலிருக்கும் பனித்துளியை...கண்ணீராக நினைத்து ஒப்பிடுகிறேன். மேலும் இதையும் விட எளிமையாக மற்றும் இனிமையாக ராஜபார்வை திரைப்பட பாடலில் கேட்டிருக்கிறேன்.
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.
இது தவிர நம் அன்றாட வாழ்கையில் அணியிலக்கனத்தை காண முடிகிறது. இங்கே மதுரையில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிலக்ஸ்சில் பார்க்கலாம். கட்சியில் ஸ்டாலின் ஆதிக்கத்தால் அமைதியாய் இருக்கும் அழகிரியை பார்த்து அவரின் ஆதரவாளர்கள் "முகிலை கிழித்து வெளியே வா முழுமதியே" என்றும், அவரின் பிறந்த நாளன்று "மதுரா என்றால் கண்ணன்....மதுரை என்றால் அண்ணன்" என்றும் சொல்வதில் உருவக அணி மற்றும் உவமேய அணிகளை காணலாம். அது போல, சோனியா காந்தியை பார்த்து மணிமேகலை என்று கலைஞரும், சிறையில் இருந்து வெளிவந்த கனி மொழியை பார்த்து "நீ பூங்கொடி அல்ல போர்க்கொடி" என்றும், பிரமேலதா விஜயகாந்தை "தென்னாட்டு ஜான்சி ராணி" என்றும் கழக உடன் பிறப்புகள் சொல்வதெல்லாம் இதற்கு சான்றாகும். மேலும் விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் கருப்பு ஞாயிறு என குறிப்பிடுவது "இல் பொருள் உவமை அணியை" குறிக்கிறது.
அது தவிர இந்த வஞ்ச புகழ்ச்சி அணியை பரவலாக கேட்கலாம். நம்ம சும்மா பாடின போதும், மாப்ளே உன் வாய்ஸ் அப்படியே யேசுதாஸ் மாதிரியே இருக்குதுனு அள்ளி விடுவாங்க. பொதுவாக அலுவகத்தில், தல கலக்கிடீங்க....உங்கள மாதிரி முடியுமா...சான்சே இல்லைனு புகழுற மாதிரி இகழ்வார்கள். இவ்வாறாக அணியிலக்கனத்தை அன்றாட வாழ்வில் காணலாம்.
(புலிகேசி மற்றும் அமைச்சரின் நையாண்டி)
புலிகேசி: அமைச்சரே, தமிழ் இலக்கணத்தில் அடுக்கு தொடர் மற்றும் இரட்டை கிளவி பற்றி உமக்கு தெரியுமா?
அமைச்சர்: மன்னா, நீங்கள் சொல்லும் இந்த சொற்றடரில் இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வரும். அவற்றுள் அடுக்கு தொடர் பிரித்தால் பொருள் தரும் (வாழ்க...வாழ்க) ஆனால் இரட்டை கிளவி பிரித்தால் பொருள் தராது (சல..சல)
புலிகேசி: பரவாயில்லை மிக சரியாக சொன்னீர். அணியிலக்கணம் போல இந்த வாக்கியங்களையும் நாம் அன்றாட வாழ்விலும் பயன் படுத்துகிறோம். குறிப்பாக இல்லத்தரசிகளின் கோரிக்கைகள் அடுக்கு தொடராக இருக்கின்றன....ஆனால் ஆனந்த மஞ்சத்தில் மட்டும் அர்த்தமற்ற இரட்டை கிளவியாக இருக்கின்றன
அமைச்சர்: பலே மன்னா..அது மட்டுமல்ல, இங்கு நீங்கள் செய்யும் அக்கபோறினால் அரண்மனை கோஷங்கள் எல்லாம் அடுக்கு தொடராகவும்...அந்தபுர விஷமங்கள் எல்லாம் இரட்டை கிளவியாக தான் ஒலிக்கின்றன.
காவலன்: மன்னா..தங்களை காண புலவர் பாணபத்திர கோணாண்டி வந்துள்ளார்.
அமைச்சர் : மன்னா...தங்களை பற்றி ஏற்கனவே பாட வந்த பாணபத்திர ஓணாண்டி-யை போல தற்போது அவரது தம்பி வேறு பாடலுடன் உங்களை பாடி மகிழ்வித்து பொற்கிழி வாங்க வந்திருகிறார். வர சொல்லுங்கள்.
(புலவரின் பாடலும்...மன்னரின் கோபமும் அடுத்து வரும் நையாண்டி தொடரில்)
கொசுறு : 80-களில் வந்த கில்மா பாடல்களில் இரட்டை கிளவி சொற்களை கேக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக