ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

மறதி



மறதி நமக்கு ஒரு தேசிய வியாதி

இந்த அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் மனதில் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது. ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அதை விட முக்கியமான வேலை டெலிகேட் ஆகும் சமயத்தில் முதலில் பார்த்து கொண்டிருந்த வேலை மறக்கடிக்க பட்டு, இரண்டாவது வேலைக்கு முக்கியத்துவம் தருகிறோம். பின்னர் நியாபகம் வந்தால் முதலில் பார்த்த வேலையை பார்ப்போம், இல்லாவிடில் கோவிந்தா தான்

வேலை ஒருபுறம் இருக்கட்டும், நம் சொந்த வாழ்வில், உதாரனமாக பேருந்தில் நடத்துனரிடம் மறந்து மீதி சில்லறை வாங்காமல் இறங்கி விடுவோம். பத்து ரூபாய் கொடுத்து, ரெண்டு ரூபாய் வாங்க மறந்தால் பரவாயில்லை. அம்பது, நூறு ரூபாய் என்றால் சிரமம் தான்.

பொதுவாக மறதியை மறக்க நான் மேற்கொண்ட செயல்கள் கிறுக்குத்தனமா இருந்தாலும், என்னை கைவிடவில்லை. உதாரனமாக, வீட்டுக்கு வந்தவுடன், மறுநாள் காலையில் பணி நிமித்தம் காரணமாக முக்கியமான வேலை இருக்குமானால், எனது காலணிகளில் ஒன்றை வழக்கமா இருக்கும் இடத்திலும், மற்றொன்றை வீட்டுக்கு வெளியே சற்று தூரம் தள்ளி வைத்து விடுவேன். அல்லது சில சமயம் மூக்கு கண்ணாடியை சாமி போட்டோ கிட்ட வைத்துவிடுவேன், அல்லது முகம் பார்க்கும் கண்ணாடியை திருப்பி வைத்து கொள்வேன் (செய்வது லூசு தனமா இருந்தாலும், எதற்காக இப்படி செய்தோம் என்று பொறி தட்டும் போது சுதாரித்து கொள்கிறேன்) 

பேருந்தில் மீதி சில்லறை வாங்காமல் மறந்து, பேருந்தில் போடும் படத்தை பார்த்து கொண்டிருப்போம் அல்லது வேற எதாவது நியபாகத்தில் இருப்போம். அப்போது மறக்காமல் சில்லறை வாங்க....கையில் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து கொள்வேன் அல்லது நியாபகத்திற்காக பேனாவை கையில் வைத்து கொள்வேன். (எதற்காக இதை கையில் வைத்திருக்கிறோம் என்று சிறிது நேரம் கழித்து நினைக்கும் போது....மறக்காமல் நடத்துனரிடம் சில்லறை பாக்கி வாங்கி விடுவேன் 

சில சமயம் வேறு எங்காவது சென்று விட்டு வீடு திரும்புகையில், கடை தெருவில் வீட்டில் சொல்லியதை வாங்கிட்டு வர மறந்திடலாம். உங்களது ப்ரைமரி மெமரியில் நீங்க போக வேண்டிய இடம் மட்டும் தான் ஸ்டோர் ஆகி இருக்கும், கடை தெருவில் வாங்க வேண்டியது செகன்டரி மெமரியில் இருப்பதால் மறந்து விட வாய்ப்பிருக்கிறது. அப்படி மறக்காமலிருக்க, கைக்குட்டையை கையின் மணிக்கட்டில் கட்டி கொள்வேன் அல்லது வீட்டிலிருக்கும் ரப்பர் பேண்டை எடுத்து இடது கையின் நடு விரல் மற்றும் ஆட்காட்டி விரலை பிணைத்து மாட்டி விடுவேன் (அந்த பிணைப்பு இருக்கும் வரை கடை தெருவில் வாங்க வேண்டியது நியாபகம் இருந்து கொண்டே இருக்கும்).

இந்த மாதிரி தான்....காலணி, நாணயம், கைக்குட்டை, மூக்கு கண்ணாடி, ரப்பர் பேன்டு போன்றவற்றை நியாபக படுத்தும் உபகரணமாக பயன் படுத்துகிறேன்.

ஆமா...நீங்க எல்லாம் யாரு...நான் எங்கே இருக்கிறேன் 

எஸ்.ரெங்க ராஜன்


கொசுறு: கஜினி சூர்யா மாதிரி அல்லது தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி வேஷ்டி கட்ட மறக்கும் அளவிற்கு உங்களுக்கு மறதி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக