KNOWN
DEVIL IS BETTER THAN UNKNOWN ANGEL, அதாவது தெரியாத தேவதையை விட தெரிந்த பூதமே
மேல். இந்த கருத்தினை யாரும் சுலபமாக ஏற்று கொள்ள மாட்டார்கள். ஒரு பத்து பேரை
வைத்து வேலை பார்க்கும் முதலாளியை கேட்டு பாருங்கள் மிகவும் சரியென்று சொல்லுவார்.
ஆமாம், பொதுவாக உங்களிடம் வேலை பார்ப்பவரிடம், நீங்க சாதாரண வேலையை தவிர்த்து,
கொஞ்ச கடினமாக வேலையே கொடுத்து பாருங்க...அவர்கள் அந்த வேலையை முடிப்பதற்குள் உங்களை மிகவும் பாடா படுத்தி விடுவார்கள் ஆனால்
கொடுத்த வேலையை கன கச்சிதமாக முடித்து விடுவார்கள். சில இக்கட்டான தருணங்களில்
இவர்கள் தான் கை கொடுப்பார்கள், என்ன சில விசயங்களை மட்டும் பொறுத்து கொள்ள
வேண்டும்.
உதரணமாக, உங்க அசிஸ்டென்ட் கிட்ட ஒரு வேலையை (ரொட்டின் வொர்க் இல்லாம ஸ்பெசல் வொர்க்) கொடுத்து....தம்பி இந்த வேலையை ரெண்டு நாளைக்குள்ள முடிச்சு கொடுத்துருடா என்று கேட்டு பாருங்க, அதற்கு அந்த தம்பி உடனே, வேலையை ரெண்டு நாளைக்குள்ள முடிக்க முடியாது.....நாலு நாள் ஆகும் என்பார், உடனே நீங்க...கண்ணா, கொஞ்சம் நேரம் நைட் இருந்து நாளைக்குள்ள முடிச்சு கொடுத்துருப்பா என்று கேப்பீங்க (இங்க அதிகார தோனியில கட்டளை போட்டீங்கன, அவ்வளவ்வு தான்....சுத்தமா வேலையே பார்க்க மாட்டங்க), அதற்கு நைட் இருந்து பாக்கிறதுக்கு அரை மனச சம்மதிச்சு, உங்க கிட்ட சில நிபந்தனை வைக்க ஆரம்பிச்சுடுவாங்க.......அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவு வேணும், ஆயிரம் ரூபா சம்பள அட்வான்ஸ் வேணும், என்னோட சிஸ்டம் பழசாகிடுச்சு....இதுல வேலை பார்த்தா லேட் ஆகும், புது சிஸ்டம் வேணும்...என்று கேக்க ஆரம்பிச்சுடுவாங்க. உடனே நீங்களும் அரசியல் வாதி மாதிரி, சரி எல்லாம் செய்யுறேன்னு வாக்கு கொடுத்துருவீங்க, அவங்களும் அதை நம்பி நைட் பகலா இருந்து வேலையை பெர்பெக்டா முடிச்சு கொடுத்துருவாங்க. (ஆனால் வேலை முடிஞ்ச பிறகு நிபந்தனையை மறந்துருவாங்க, திருப்பி இதே மாதிரி கடினமான வேலை டெலிகேட் பண்றப்ப...மறுபடியும் மேல சொன்னது போல கிராக்கி பண்ணுவாங்க)
நீங்க இந்த மாதிரி தட்டி கொடுத்து வேலை வாங்கும் பூதங்களின் நிபந்தனைக்கு எரிச்சல் பட்டு....ஆபிஸ்ல வேற யாருகிட்டயாவது கொடுக்கலாம் என்று நினைக்கும் போது, புதுசா படிச்சு முடிச்சு சிவப்பா, இன் பண்ணி, கையில சாம்சங் கேலக்சி நோட் வச்சுக்கிட்டு வேலைக்கு சேந்திருக்கும் ஒரு தம்பி உங்க கண்ணுல தென்படும் உடனே நீங்க அந்த தம்பி கிட்ட அப்ரோச் பண்ணும் போது....அந்த பையன் எதையும் டிமான்ட் செய்யாம...."ஐ வில் கம்ப்ளிட் டுமாரோ...இஸ் தேர் எனிதிங்" என்று சொன்ன உடனே, நீங்க பரவயில்லையே....புதுசா வந்த தம்பி சூப்பர், நம்ம சொல்றத செஞ்சு முடிக்க ஒரு தேவதை மாதிரி ஒரு ஆள் கிடைச்சுருச்சு என்று சந்தோஷபடுவீங்க. இப்போ நீங்க ஆர்வத்துடன் அடுத்த நாள் காலையிலே அந்த தம்பியை பார்த்து கேக்கும் போது...."ஐ அல்மோஸ்ட் கம்ப்ளிட்...ப்ளீஸ் கிவ் சம் டைம்" சொல்லும் உங்க தேவதை. நீங்க அப்போ கொஞ்ச யோசிக்க ஆரம்பிச்சுடுவீங்க.....சரி தம்பி ஈவனிங்-குள்ள முடிச்சு கொடுத்துருங்க என்று சொல்லிட்டு உங்க கேபினுக்கு போவீங்க. பிறகு சாயுங்காலம் போயி அந்த தம்பி கிட்ட கேக்கும் போது, "ஸாரி சார், இட் வில் டேக் டைம் தேன் எக்ஸ்பெக்டட், அக்சுவலி....." என்று பீட்டர் விட ஆரம்பிச்சுடும். நீங்க உடனே, கொஞ்ச நைட் வரைக்கும் இருந்து முடிச்சு கொடுத்துருப்பா என்று சொல்ல வரதுக்குள்ள, அந்த தம்பி "டுடே ஐ ஹேவ் டு கோ எர்லி என்று பையை தூக்கிட்டு கிளம்பிரும். கடைசியிலே நீங்க, தேவதை மாதிரி சொன்ன வேலைய செஞ்சு முடிப்பான்னு பார்த்த இப்படி கவுத்து விட்டானே என்று அப்செட் ஆகிடுவீங்க. நாளைக்கு உங்க சேர்மன் இல்ல கிளைன்ட்-க்கு என்ன சொல்றதுன்னு முளிப்பீங்க.
இந்த வேலைய மட்டும், ஆபீஸ்-ல முதலில் சொன்ன நம்ம கிராக்கி பண்ற தம்பி கிட்ட சொல்லி இருந்தீங்கன, வேலைய சூப்பர முடிச்சு பின்னி பூ வச்சுரப்பான் என்ன... கொஞ்ச நம்ம தம்பி கிட்ட நைசா பேசி, அடுத்த வாரம் லீவு கேட்டேல, எடுத்துக்க. அப்புறம் ஏதோ அட்வான்ஸ் வேணும்ன்ல, HR கிட்ட சொல்லிடுறேன். சரி, இந்த வேலைய மட்டும் நாளைக்குள்ளே முடிச்சு கொடுத்துறேனு கேட்டு பாருங்க....கண்டிப்பா நம்ம தம்பி, மீடியா பிளேயர்ல இளையராஜா MP3 பாட்டு மைல்டா வச்சுகிட்டு, நைட் வொர்க் பண்ணி பக்காவா கொடுத்துருவான். நீங்க பூதம்-னு நினச்ச பிக்காளி பையன் தான் உங்களுக்கு நிஜமான தேவதையா தெறிவான்
ஆபிஸ்-ல வேலை பாக்கிற நபர்களை மட்டும் சொல்ல வரல, மற்ற இடங்களில் வேலை பார்க்கும் வெல்டர், பிளம்பர், பெயிண்டர், மளிகை கடை, தியேட்டர் மற்றும் இதர வேலை செய்யும் இடங்களில் இக்கட்டான நேரங்களில் தெரியாத தேவதைகளை விட, தெரிந்த பூதங்களே சிறப்பாக வேலையே செய்து முடிக்கும்.
வேலை பார்க்கும் இடங்களில் மட்டுமன்று, சில சமயம் உங்க சொந்த வாழ்க்கையிலும், சில பூதங்கள் கொஞ்சம் மக்கர் பண்ணினாலும் கடைசி வரை உங்களுக்காக எல்லா வேலையும் செய்கிறது. உங்க சொந்த வாழ்வில் சில பூதங்கள் என்ன செய்ய போகிறது......பிசாசு மாதிரி பின்னாடி நின்னு பிராண்டும், சில சமயம் கத்தும், விக்கிரமாதித்தியன் வேதாளம் மாதிரி உங்க முதுகுல ஏறி அடம் பிடிக்கும் .....இப்படி சில இம்சை கொடுத்தாலும், "அலாவுதினும் அற்புத விளக்கும்" பூதம் அசோகன் மாதிரி (ஆலம்பனர்...உய் உய்), நான் உங்கள் அடிமை பிரபு என்று சொல்லி, உங்களுக்கு கட்டுப்பட்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து உங்களுக்கு நிம்மதி மற்றும் சந்தோசத்தை கொடுக்கிறது. பூதங்களுக்கு ஏமாற்ற தெரியாது மற்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும். "பூதங்கள் தான் நிஜமான தேவதைகள்".
ஆனால் தேவதைகள், உங்கள் பெர்சனல் மற்றும் ப்ரொப்பசனல் வாழ்வில் உங்களை கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமித்து, உங்க நிம்மதியை கெடுக்கிறது. தேவதைகள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.....இறுதியில் தேவதைகள், ராட்சசி போல மாறுவதை உணர்வீர்கள். தேவதையை நம்பி தெருவில் வந்தவர் ஏராளம் (தேதிய போல கிளிச்சுபுட்ட, தேவதை அவளை நம்பி கேட்டேன்)

KNOWN DEVIL IS JUST LIKE A DEVIL - BUT
UN-KNOWN ANGEL MIGHT BE A DARE DEVIL
எஸ். ரெங்க ராஜன்